வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ற்போது ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலை பயன்படுத்தி வடபகுதி மக்களின் சமூக பொருளாதார கல்வி முன்னேற்றத்திற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (3) கரவெட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

கடந்த காலத் தமிழ்த் தலைமைகளின் தவறான வழிநடத்தலாலும் கண்மூடித்தனமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்ற குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சக்திகளே இன்றைய அழிவுகளுக்கெல்லாம் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் அவர்கள் கடந்த காலப் படிப்பினைகளைக் கருத்திற் கொள்ளாமல் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களின் இருண்ட யுகம் நோக்கி அழைத்துச் செல்ல முற்பட்ட வேளையில் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தான் சிறந்த எதிர்காலத்திற்கான பாதையைக் காட்டிவருவதாகவும் அப் பாதையில் தமிழ் மக்கள் செல்வதன் மூலமே சுபீட்சமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியுமென்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதயன் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் உட்பட திணைக்களத் தலைவர்கள் கிராம சேவகர்கள் சமுhத்தி உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’