வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

மாற்றத்தால் ஜனாதிபதிக்கு அதிகாரம்

திர்வரும் புதன்கிழமை அதாவது செப்டம்பர் எட்டாம் தேதியன்று இலங்கையின் அரசியல் சாசனத்தில் முக்கியமான சில மாற்றங்கள் சட்டமாக நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

இந்த மாற்றங்கள் வருமானால் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவின் அதிகாரங்கள் கணிசமான அளவில் அதிகரிப்பதோடு, ஜனாதிபதி பதவிக்காக அவர் தான் வேண்டுமான காலத்துக்கு மீண்டும் மீண்டும் போட்டியிட இது வழி ஏற்படுத்தித்தரும்.
தற்போதைய நிலையில் இலங்கையில் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்தவர், அதற்கு மேல் அப்பதவிக்குப் போட்டியிட அரசியல் சாசனம் தடை விதிக்கிறது. அவசர நடவடிக்கையாக அரசாங்கம் இந்த மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
மக்கள் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தாமல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் மட்டும் இவற்றை சட்டமாக நிறைவேற்ற முடியுமா என்பது பற்றி உச்சநீதிமன்றம் தற்போது பரிசீலித்து வருகிறது நாட்டின் முன்னேற்றப்பாதையில் ஒரு முக்கிய மைல்கள் முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் என அரசு ஊடகங்கள் கூறுகின்றன.
ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம்
ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம்


ஆனால் சட்டத்தரணிகளும் சமூக ஆர்வலர்களுமோ, இது சர்வாதிகாரத்தை நோக்கிய - ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதை நோக்கிய பாதை என்று கூறி இந்த மாற்றங்களை எதிர்க்கின்றனர்.
கடந்த ஜனவரியில் ஜனாதிபதியாக இரண்டாவது முறைத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ராஜபக்ஷ, 2016 நடக்கக்கூடிய அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகவும், வேண்டுமென்றால் அதற்கு பின்னர் நடக்கக்கூடிய தேர்தல்களிலும் அவர் போட்டியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியல் சாசன மாற்றங்கள் வழிவகுக்கும்.
இந்த மாற்றங்களால் அவருடைய அதிகாரங்களும் பெருமளவுக்கு கூடிப்போகும். இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்த பின்னர், தேர்தல் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் போன்று வரிசையாக பல வித ஆணையங்களுக்கும், நாட்டின் முக்கிய நீதிபதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை அவர் தனியொரு ஆளாக முடிவெடுத்து நியமிக்க முடியும்.
இந்த நியமனங்கள் பற்றி முடிவு செய்யும்போது ஐந்து நபர்கள் கொண்ட நாடாளுமன்ற நிபுணர் குழுவின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்றுதான் முன்மொழியப்படும் புதிய மாற்றங்கள் கூறுகின்றன. அவர்களின் கருத்தை ஜனாதிபதி மதித்து நடக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சாசன சபையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே இப்படியான நியமனங்களை ஜனாதிபதி செய்ய முடியும் என்கிற நிலை இதுநாள் வரையில் இருந்தது. ஆனால் தற்போதைய மாற்றங்களின் கீழ் இந்த அரசியல் சாசன சபை கலைக்கப்படும்.
ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு தடவைக்கு மேல் இருக்க முடியாது என்ற தடையை அகற்றுவதன் மூலம் மக்களுக்கு கூடுதலான தெரிவுகள் கிடைக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. தவிர அரசுப் பொறுப்புகளுக்கான நியமனங்களில் தேவையில்லாத நடைமுறைகளை அகற்ற இந்த அரசியல் சாசன திருத்தங்கள் உதவும் என்று அது தெரிவிக்கிறது.
ஆனால் இந்த மாற்றங்கள் யதேச்சதிகாரமானவை என்று இவற்றை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இந்த அரசியல் சாசன மாற்றங்களை அவசர நடவடிக்கையாகக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர்கள் கேட்கிறார்கள்.
தவிர மக்கள் முன்னிலையில் விவாதிக்காமல் மக்கள் கருத்தைப் பெற முயலாமல் இரகசியமாக இந்தத் திட்டங்களை வரைந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த அரசியல் சாசன மாற்றங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாகக் கொண்டுவந்தால் செல்லும் என்பதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளுமானால், இது நிச்சயம் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று தெரிகிறது ஏனென்றால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இந்த மாற்றங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க அரசாங்கம் இணங்கவைத்துள்ளது. ஆகவே அரசாங்கத்துக்கு இரண்டில் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துவிட்டது.
  .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’