மக்கள் அமைப்புக்களை வலுப்படுத்துவதன் மூலமே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென ஈ.பி.டி. பியின் யாழ். மாவட்ட பாரளுமன்று உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
. நேற்றைய தினம் (28) சாவகச்சேரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சேவாலங்கா நிறுவனத்தின் 3000 குடும்பங்களுக்கு சுகாதார பொதிகள் வழங்கும் நிகழ்வையும் ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தினால் செயல்படுத்தப்படும் 50 குடும்பங்களுக்கு வாழ்வாதார திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மக்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் சகல மட்டங்களிலும் அவர்கள் செல்வாக்கு செலுத்த வல்லவர்களக மாற்றுவதே எமது பணியாகும் இன்று மீள் குடியமர்ந்த குடும்பங்களுக்கான சுகாதார பொதிகள் மற்றும் வாழ்வாதார திட்டத்துக்கான தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அவற்றை பெற்று அதன் முழுப் பலனையும் நீங்கள் பெறவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் செ. சிறினிவாசன் மற்றும் சேவாலங்கா பிரதிநிதிகள் ஐக்கிய அபிவிருத்தி நிதிய பிரதிநிதிகள் ஈ.பி.டி. பியின் கொடிகாமம் பிரதேச பொறுப்பாளர் க. செல்வரத்தினம் (விஸ்வா) கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’