நான்காயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் இலங்கை பொலிஸில் இணைந்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் 340 பேர் இலங்கை பொலிஸில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்
.தற்போது மேற்படி 340 தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி நிறைவடைந்தவுடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படவுள்ளனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேர்க்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளும் கற்பிக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.
இதேவேளை, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் எழுதுவது தொடர்பில் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’