குமரன் பத்மநாதனின் (கே.பி.) சொத்துக்களை வடக்கு கிழக்கு அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதைவிட, புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்ப்பதற்கு அவரை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா, பிள்ளையான் ஆகியோர் வெளியேறியபோது அவர்களைக் கையாண்ட வழியில் குமரன் பத்மநாதனையும் அரசாங்கம் கையாள வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க கூறினார்.
'புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள நாட்டிற்குப் பங்கமேற்படுத்தும் நடவடிக்கைகளை இன்னும் மேற்கொண்டு வரும் நபர்களை எதிர்கொள்வதற்கு கே.பியை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும்' என அவர் கூறினார்.
அதேவேளை, கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் நடவடிக்கைகள் குறைந்திருப்பதாக தென்படுவதாகவும் நிஷாந்த சிறி வர்ணசிங்க கூறினார்.
தற்போது புனர்வாழ்வளிக்கப்படும் புலிகளின் முன்னாள் போராளிகள் 10 ஆயிரம் பேர் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் இன்னும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் அவர்கள் குறிப்பிடத்தக்க காலத்திற்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’