கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 492 இலங்கை அகதிகளுக்குத் தமது உறவினர்களுடன் உரையாற்ற தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன
.கடந்த 14 வாரத்திற்கும் அதிகமான காலம் தமது உறவினர்களுடன் உரையாடவில்லை என எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்துள்ள அகதிகள் அந்நாட்டு அரசாங்கத்திடம் தெரிவித்திருந்தனர்.
இதனைக் கவனத்திற் கொண்டே அவர்களுக்குத் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி வசதியானது 10 சதம் என்ற குறைந்த கட்டணத்திலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள தமது உறவினர்களுடன் உரையாற்ற வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று புதன்கிழமை முதல் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளின் பின்னர் வெளியேற்றப்படுவார்கள் எனவும் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’