இலங்கை அரசின் சார்பில், பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இந்தியக் குழுவில், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள் கடந்த ஜூன் மாதம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தியா வந்தபோது, இலங்கையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 புதிய வீடுகளைக் கட்டித் தருதல், ரயில்வே, விமானத் தளம் மற்றும் துறைமுகங்களை மேம்படுத்துதல், தொழிற்பயிற்சி அளித்தல், விவசாய முன்னேற்றத்துக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அவற்றுக்காக, இந்தியா ஏற்கனவே சில உதவிகளையும் வழங்கியிருக்கிறது.
இடம்பெயர்ந்த ஒரு பெண் |
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்கள் விரைவில் இலங்கை சென்று, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட உள்ள நிலையில், அப்போது அத்திட்டங்கள் தொடர்பாக அடுத்தகட்டமாக விவாதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்கள் மாலை இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் போர் முடிவடைந்து நிவாரணத் திட்டங்களுக்காக இந்தியா அறிவித்துள்ள உதவிகளை இலங்கை எந்த வகையில் பயன்படுத்தி வருகிறது என்பது தொடர்பாக, பிரணாப் முகர்ஜியிடம் பஸில் ராஜபக்ஷ அவர்கள் பல்வேறு விவரங்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தேவைப்படும் நிதி உதவிகள் குறித்தும் இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’