மீ ள் குடியேற்றிய மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு நன்கொடை வழங்குவோரை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதி நிதியும் மனிதாபிமான இணைப்பாளருமான நீல் புஹ்னே கோரியுள்ளார்
."இன்னும் பல முக்கியமான வேலைகள் செய்யப்பட வேண்டி இருப்பதால் இதற்கு உங்கள் உதவி தேவை" எனவும் அவர் கூறியுள்ளார்.
"மீள் குடியேறியுள்ள மக்களின் நலன், இணக்கப்பாட்டின் முக்கிய ஒரு மூலமாகும். இதுவே இறுதியாக நிலைபேறான சமாதானம், அபிவிருத்தி என்பவற்றுக்கு இட்டுச் செல்லும்.
ஐக்கிய நாடுகளின் இணைந்த செயற்பாடுகள் 300,000 மக்களுக்கு சுத்தமான நீர், சுகாதார வசதிகள் என்பவற்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கல்வி போசாக்கு, ஆரோக்கியம் போன்ற பொது விடயங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. இது மீளக்குடியேற்றியவர்களுக்கும் முகாமில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.
இருப்பினும் மீளக்குடியேறியவர்கள் பலவீனமாகவும், வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் வரை ஆதரவு தேவைப்படுபவர்களாகவும் உள்ளனர்.
நிதித் தட்டுப்பாடு, இந்த மக்களுக்கான அவசர உதவிகளை வழங்கும் எமது ஆற்றலை குறைத்து விட்டது. சகலதுறையிலும் பற்றாக்குறை உண்டு. ஆனால், பொருளாதார மீட்சி, உட்கட்டமைப்பு, நீர், சுகாதாரம், விவசாயம், ஆரோக்கியம் என்பவை
தொடர்பான வேலைகளுக்கு தேவையான நிதியில் பெருமளவு பற்றாக்குறை காணப்படுகிறது" எனவும்புஹ்னே குறிப்பிட்டுள்ளார்.
125 அமெரிக்க டொலர் கிடைத்துள்ள போதிலும், இந்த வருட முடிவுவரை இன்னும் 165 மில்லியன் டொலர் தேவையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
"அவசரமான, மிகவும் கடினமான வேலைகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டன, வாழ்வை மீண்டும் தொடங்க தேவையான அவர்களின் பலத்தை மீட்டெடுக்க உதவினோம். ஆனால், இன்னும் நிறையவே செய்ய வேண்டியுள்ளது. மீளக்குடியேறிய மக்கள் இன்னும் பல்வகை ஆபத்துக்களுக்கும் முகங்கொடுக்கும் நிலையிலேயே உள்ளனர்" எனவும் நீல் புஹ்னே தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’