பிரசித்திபெற்ற தொண்டமனாறு சிறி செல்வச்சந்நிதி தேவஸ்தான பெருந்திருவிழா இரதோற்சவம் இன்றையதினம் (23) வெகுசிறப்பாக இடம்பெற்றது புகைப்படம் இணைப்பு .
இன்றுகாலை எட்டு மணிக்கு தேவஸ்தான பிரதம குருக்கள் சிவசிறி கந்தசாமி ஐயர் உலககுருநாத ஐயர் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜையினைத் தொடர்ந்து இரதோற்சவ பவனி ஆரம்பமாகியது. தேவஸ்தான வளாகம் முழுவதும் பக்திப் பரவசத்தில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் அலைமோத அந்த அலைகளுக்கு நடுவே மூன்று சித்திரத்தேர்களும் அசைந்துவந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. கடலும் கடல் சார்ந்த இயற்கை எழில் நிறைந்த அச்சூழலில் சந்நிதி வேலன் பலவர்ண மலர்களினால் அலங்கரிக்கப்பட்டு தேர் ஏறி வீதி உலாவந்தபோது ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமிழுத்து இரதோற்சவ பெருவிழாவில் பங்குகொண்டமை சிறப்பம்சமாகும்.
முன்தாக சிறி செல்வச்சந்நிதி தேவஸ்தான பெருந்திருவிழா ஆரம்பமாவதற்கு முன்பாகவே அங்கு சென்று ஆரம்ப ஏற்பாடுகளைப் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெருந்திருவிழா ஆரம்பமானதன் பின்னரும் பல தடவைகள் அங்கு விஜயம் செய்தமை நினைவுகூரத்தக்கது. குறிப்பாக வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோருக்கு உரிய ஆலோசனைகளையும் பணிப்புரைகளையும் வழங்கியிருந்த அமைச்சரவர்கள் மகேஸ்வரி நிதியத்தினூடாக 75 லோட் மணலை தேவஸ்தான சுற்றாடலில் பரப்புவதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் தேவஸ்தான சுற்றாடலெங்கும் மின்விளக்குகளையும் பொருத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’