விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றிருந்தார் என்று கூறி, பார்வையற்ற ஒருவரைக் கைது செய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
.விடுதலைப் புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் என சிறீசெல்வன் ஜூட் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒழுங்குமுறையான விசாரணைகள் இன்றி பார்வையற்ற ஒருவரை விடுதலைப்புலிகளிடம் ஆயுதப் பயிற்சி பெற்றார் எனப் பொலிஸார் எவ்வாறு கைது செய்யமுடியும் என பிரதம நீதிபதி அசோக டீ சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜூட் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில்,
"புனர்வாழ்வு நிலையத்தில் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்"எனத் தெரிவித்துள்ளார்.
பிணையில் விடுதலை செய்வதற்கான சாதக நிலையை உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’