வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைய வேண்டும்: ஹரீஸ் எம்.பி

திர்வரும் பத்தாண்டு அரசியலைக் கருத்திற் கொண்டு, அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதே கட்சிக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும் நன்மை தருவதாக அமையும் என மு.கா.வின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்
.அரசாங்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்பட வேண்டும் என, மு.கா.வின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
இது தொடர்பாகவும், அரசாங்கத்தோடு முஸ்லின் காங்கிரஸ் இணைய வேண்டுமா, இல்லையா எனவும் அவரிடம் நாம் வினவியபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டால், முஸ்லிம் காங்கிரஸ் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதோடு, தனது ஆதரவாளர்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
எதிர்க்கட்சியில் இருப்பதால் எதுவித பயனுமில்லை. நாட்டில் தற்போது இருப்பது பலவீனமானதொரு எதிர்க்கட்சியாகும். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவரும் பலவீனமானவர். அவரை கட்சித் தலைமைத்துவத்திலிருந்து கழற்றிவிட வேண்டும் என்று அவரின் கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துள்ளன. எனவே, தொடர்ந்தும் பலவீனமானவரே எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்.
இப்படியானதொரு எதிர்க்கட்சியில் மு.கா.வும் இணைந்திருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
அரசாங்கத்தோடு இணையும்போது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றும் இல்லை. ஆளுந்தரப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இருப்பது தற்போதைய நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கும், கட்சிக்கும் பலமான விடயமாகும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’