வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ரணிலின் தவறால் போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தது: ரஜீவ விஜேசிங்க

2001ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் சிறந்ததொரு திட்டம் எனவும் ஆனால், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதை சரியாக ஒருங்கிணைக்க முடியாததால் அது தோல்வியடைந்தாகவும் அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தள்ளார்
.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
"போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் சம்பந்தப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவினதும் ஏனைய பல அதிகாரிகளினதும் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நன்மையளித்தன. புலிகளுக்கு சமாதான செயலகம் நிதி வழங்கியது. அந்நிதியின் மூலம் என்ன செய்யப்படுகிறது என்பதை கண்காணிப்பதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை" என அவர் கூறினார்.
"முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போலல்லாது, ரணில் விக்கிரமசிங்க தான் புலிகளின் கைப்பாவையாக இருப்;பதன் தவறை உணர்ந்துகொள்ளவில்லை. அவரின் சிறுபிள்ளைத்தனமான குறைகூறப்படத்தக்க நடவடிக்கைகள் காரணமாக போர் நிறுத்தக் காலமானது, தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்த அனைத்து தமிழ்த் தலைவர்களுக்குக்கும் நம்பிக்கைத் துரோகமாக அமைந்தது" எனவும் ரஜீவ விஜேசிங்க கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’