வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

பக்த வெள்ளத்தில் தேரில் வலம்வரும் சந்நிதியான்

01A

02

08


தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 13 சங்கிலிகளும் ஒரு தாலிக் கொடியும் திருடர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.இதனுடன் தொடர்புடைய பெண் ஒரு வரும் ஆண் ஒருவரும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரலாற்று புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திரு விழா நேற்று இடம் பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பெருமளவான பறவைக்கா வடிகள், என்பவற்றையும் மேற்கொண்டனர். இவ்வாறு பக்தர்கள் பக்திபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இவ்வாறு சுமார் 13 தங்கச் சங்கிலிகளும், ஒரு தாலிக்கொடியும் களவு போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணும் ஆணும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆலயச் சூழலிலும் உட்ப குதியிலும் பொலிஸார் கடமையில் இருந்த போதிலும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.தமது நகைகளை பறிகொடுத்தவர்களில் பெருமளவானோர் வயது முதிர்ந்த பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை ஆலயத் திருவிழாவுக்குச் செல்லும் போது கவரிங் நகைகளை அணிந்து செல்லுமாறு யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’