வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

மானிப்பாய் சிறி சத்ய சாயி பாடசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்.

மானிப்பாயில் இயங்கும் சிறி சத்ய சாயி பாடசாலை சமூகத்தினரின் அழைப்பின்பேரில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் (18) அங்கு விஜயம் செய்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று காலை பாடசாலையைச் சென்றடைந்த அமைச்சர் அவர்களை பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் பூக்கொத்துக்களை வழங்கி அன்புடன் வரவேற்றனர். பதினெட்டு ஆசிரிய ஆசிரியைகளையும் 162 மாணவ மாணவிகளையும் கொண்டியங்கும் இப்பாடசாலையானது சாயி தத்துவத்தின்படி சாந்தி அமைதி ஒழுக்கம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி சிறார்களுக்கு கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது விசேட அம்சமாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பினைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகத்தினர் சாயிசமித்தியினர் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோருடனான கலந்துரையாடல் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை பணிப்பாளரும் நீதவானுமாகிய திரு.வசந்தசேனன் அவர்கள் இக்கூட்டத்தினை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் தமது அழைப்பினை ஏற்று வருகை தந்தமைக்காக பாடசாலை சமூகத்தினரின் சார்பில் அமைச்சரவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர் சிறந்த முறையில் இப்பாடசாலை இயங்கிவருகின்றபோதும் இதுவரை அரசாங்க பதிவு நடவடிக்கை பெறப்படவில்லை எனத்தெரிவித்தார். இதன்காரணமாக இப்பாடசாலையில் கல்வி பயிலும் சிறார்கள் வேறு பாடசாலைகள் ஊடாகவே கல்வித்திணைக்களத்தால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு தோற்றவேண்டியிருப்பதாகவும் எனவே உரிய பாடசாலைப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் ஆவண செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் எமது பிரதேச சூழ்நிலை மாறி இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. நாம் இரத்தம் சிந்தியது போதும். எதிர்வரும் நாட்களில் எமது பிரதேச அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து சிந்தித்து முழுமூச்சுடன் உழைப்போம். அந்தவகையில் எதிர்காலத்தில் படித்த பண்பாண ஒரு சமூகத்தை உருவாக்குவதில் சிறி சத்ய சாயி பாடசாலையும் ஓர் முக்கிய பங்குவகிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் பாடசாலை பதிவு நடவடிக்கை சம்பந்தமான கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்தார்.

இக்கூட்டத்தின் இறுதியில் பாடசாலையின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட ஆலோசகருமான திரு கந்தசாமி அவர்கள் நன்றி தெரிவித்து உரையாற்றுகையில் தமது அழைப்பினை ஏற்று வருகை தந்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினரின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் அமைச்சரின் காலத்திலேயே சிறி சத்ய சாயி பாடசாலை உட்பட எமது பிரதேசமும் சமூகமும் முன்னேறி சிறந்ததொரு நிலைமையினை அடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார். இச்சந்திப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரன் மானிப்பாய் பொறுப்பாளர் தோழர் ஜீவா ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’