வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணி : இந்திய ஒப்பந்தம் மேலும் நீடிப்பு

லங்கையில் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீடிக்க இந்தியா சம்மதித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 7 இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன.
அவற்றின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீடிக்கவே இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலர் பி.பி.ஜெயசுந்தராவிடம் இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா இதனைத் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரால் இடம்பெயர்ந்தவர்களை மறுகுடியமர்த்தும் பணியையும், வடக்குப் பகுதியில் ரயில் இருப்புப்பாதை அமைக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியிலும் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’