அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டில் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் பலரிடையே நிலவி வருகின்ற தெளிவின்மையை அகற்றி நுகர்வோரிடையேயும் வர்த்தகரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்
.
இவ்விடயம் தொடர்பில் இன்றைய தினம் அமைச்சர் அவர்களது பணிமனையில் விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது, யாழ் குடாநாட்டு வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் கலந்து கொண்டனர்.
விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகள் நடாத்தப்பட்டு வருவதனால் இவ்விடயம் தொடர்பில் குடாநாட்டு வர்த்தகர் சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து வர்த்தக மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் அவர்கள் நுகர்வோர் பாதுகாப்புச் சபை அதிகாரிகள் வர்த்தகர்கள் காவல்துறை அதிகாரிகள் அரச அதிபர் மேலதிக அரச அதிபர் ஆகியோரைக் கொண்டு பொருட்களின் விலைக் கட்டுப்பாடு தொடர்பிலான தெளிவினை நுகர்வோருக்கும் வர்த்தகர்களுக்கும் உரிய ஏனைய துறையினருக்கும் ஏற்படுத்தும் முகமாக எதிர்வரும் 23 ம் திகதி உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் மரக்காலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் மருந்தகங்களில் பணி புரிவதற்கான மருந்தாளர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் அன்றைய தினம் விஷேட கலந்துரையாடல்களை அமைச்சர் அவர்கள் உரிய தரப்பினருடன் மேற்கொள்ள உள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’