வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

கிழக்கு மீள்குடியேற்ற பிரதேச புனரமைப்பு பணிக்காக 42.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளின் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென 42.3 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிரன் தெரிவித்தார்
.அமைச்சர் முரளி தரனின் ஆலோசனைக்கமைய கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்துக்கு இணையாக அந்த மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடனேயே இந்த 42.3 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சேதத்துக்குள்ளான 482 வீடுகளை மீண்டும் புதுப்பிப் பதற்காக 27.3 மில்லியன் ரூபாவும் குழாய்நீர் கிணறுகள், மற்றும் குடிநீர்க் கிணறுகளுக்கென 15 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
கல்குடா, வாகரை வடக்கு மற்றும் வாகரை மத்தி போன்ற பகுதிகளில் வீடுகளை புனரமைக்கும் திட்டத்துக்கும் போரதீவுபற்று, மண்முனை தென்மேற்கு, மண்முணை மேற்கு, ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று தெற்கு போன்ற பகுதிகளில் கிணறுகள், குழாய்க்கிணறுகள் திட்டத்துக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஊடாக மேற்குறிப்பிடப் பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இதே போன்று கிழக்கில் ஏனைய பகுதிகளிலும் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கும் இவ்வாறான திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’