வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

புலிகளுக்கு உதவிய அரச சார்பற்ற நிறுவனங்களை வெளியேற்றத் திட்டம்

மிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அரச சார்பற்ற நிறுவனங்களின் இலங்கை அலுவலகங்களை மூடிவிட்டு, அதன் உத்தியோகஸ்தர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது என பிரதமர் டி.எம். ஜயரட்ன இணையத் தளத்துக்குத் தெரிவித்துள்ளார்
.புலிகளுக்கு நிதி, ஆயுதங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் இனம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்ட மற்றும் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்று குற்றச்சாட்டு குறித்து பிரதமர் கூறுகையில்,
தொண்டு நிறுவனங்களின் உத்தியோகஸ்தர்கள் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளுக்குச் சென்று காயமடைந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க நேரிடும். அதனால் கண்ணிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்கு மாத்திரம் செல்வதற்கே அரசாங்கம் அனுமதி வழங்கும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’