இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
.கடந்த புதன் கிழமை இந்தியாவின் மத்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து இலங்கை தமிழர்கள் பிரச்சினை,இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதன் போது மீள் குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடும் நோக்கிலும், மீனவர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கும் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாக நிரூபா ராவ் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தியாவின் சிறப்பு தூவதராக உள்துறை அமைச்சர் சிதம்பரம் அல்லது டீ.ஆர் பாலு விஜயம் இலங்கைக்கு செய்யலாம் எனவும் தகவல்கள் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’