மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு அனைத்துப் பிரதேச பிரிவிலும் கடமையாற்றும் அதிகாரிகள் அனைவரும் முன் வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வலி தெற்கு உடுவில்; பிரதேச செயலகத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (13) காலை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற போது தலைமையுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் உடுவில் பிரதேச செயலகம் அதிகளவான மக்களைக் கொண்டுள்ளது. இங்கு உயர்பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேறிய மக்களும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களும் வசிக்கின்றனர். மக்களுக்கு சேவைகளைச் செய்வதற்கு இப்பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும் உடுவில் பிரதேச செயலகத்தை யாழ் மாவட்டத்தில் முன்னணி பிரதேச செயலகமாக கொண்டுவர நாம்; அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என சந்திரகுமார் அவர்கள் கேட்டுக் கொண்டார்
தொடர்ந்து போக்குவரத்துச் சபை சுகாதாரத் திணைக்களம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மின்சார அபிவிருத்தி அதிகார சபை போன்ற அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்பட்டது.
இந் நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சசிதரன் பிரதேச சபை செயலாளர் சுலோசனா முருகனேசன் வலயக்கல்விப் பணிப்பாளர் பரமநாதன் விக்னேஸ்வரன் ஈ.பி.டி.பி.யின் வலிகாம இணைப்பாளர் ஜீவன் சுன்னாக பிரதேச பொறுப்பாளர் அன்பு உலக உணவுத்திட்டத் தலைவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கிராம சேவையாளர்கள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’