"நான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பதவிக்கு வருவேன்" என முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
களனியில் தனது ஆதரவாளர்களை இன்று சந்தித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையையடுத்து ஜனாதிபதியினால் பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே தான் மீண்டும் பதவிக்கு வருவார் என மேர்வின் சில்வா கூறியுள்ளார். அதேவேளை தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து தனக்கு கரிசனை இல்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’