ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்திய சர்வதேச இளைஞர் வருடம் இன்றையதினம் (12) ஜனாதிபதி தலைமையில் பிரமாண்டமான முறையில் சம்பாஷணையும் பரஸ்பர புரிந்துணர்வும் என்ற தொனிப்பொருளில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2010 ஆம் ஆண்டை சர்வதேச இளைஞர் வருடமாக பிரகடனம் செய்தார். அத்துடன் இதனைக்குறிக்கும் முகமாக புதிய இணையத்தளம் ஒன்றினை ஆரம்பித்து வைத்ததுடன் சர்வதேச இளைஞர் வருடத்தினைக் குறிக்கும் புதிய முத்திரையினையும் முதல் நாள் தபால் உறையினையும் வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் லலித் பியூம் பெரேரா ஆகியோருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வடக்கு கிழக்கிலிருந்து வருகை தந்துள்ள 640 இளைஞர் யுவதிகள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்திருந்த இளைஞர் யுவதிகள் ஆகியோருடன் பெருமளவிலானோர் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர். இளைஞர் வருடம் 2011ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’