சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கையைக் கண்டித்து நாளை வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் இணைந்து கொள்ளுமாறு அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் உப செயலாளர் ஐ.ஏ.ஜி.வஹாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு முன்னாள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளனர்.
இதே நடவடிக்கையினை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் வேறுபாடின்றி மேற்கொள்ளவேண்டும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியை பகிஸ்கரிப்பு செய்வதுடன் அமைச்சரின் இந்நடவடிக்கையினை கண்டிக்கவேண்டும்; என்றும் மக்களுக்காக சேவை செய்யும் உத்தியோகத்தரை பலர் முன்னிலையில் கேவலப்படுத்திய அமைச்சரின் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாகவும் வஹாப் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’