வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஆகஸ்ட், 2010

"வெள்ளவத்தை ஸ்ரீ சுவிசுத்தாராமய விகாராதிபதிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் "

வெள்ளவத்தை ஸ்ரீ சுவிசுத்தாராமய மற்றும் மாளிகாவத்தை போதிராஜராமய விகாரைகளின் விகாரதிபதி வண. உவத்தன்ன சுமண தேரோவுக்கும் (38) ஏனைய நால்வருக்கும் எதிராக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வைத்திருந்தமை தொடர்பாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என சிரேஷ்ட அரச சட்டத்தரணி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தான் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டமைக்கு ஆட்சேபம் தெரிவித்து வண. உவத்தன்ன தேரோவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, நீதிபதிகள் என்.ஜி.அமரதுங்க, கே ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோதே அரச தரப்பு சட்டத்தரணி மேற்கண்டவாறு கூறினார்.
தனது கைதும் தடுத்துவைப்பும் தனது அரசியல் ஆதரவுநிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமானது என வண. உவத்தன்ன தேரோ அம்மனுவில் தெரிவித்திருந்தார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தான் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்ததாகவும் ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ரியாஸ் ஹம்ஸா ஆஜரானார். மனுதாரரின் சார்பில் ஜே.சி.வெலியமுனவும் சாலிய பீரிஸும் ஆஜராகினார். இது தொடர்பான விசாரணை செப்டெம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’