வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஆகஸ்ட், 2010

செல்வச்சந்நிதி தேவஸ்தான பெருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு விஜயம்.

டமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதி தேவஸ்தான பெருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேவஸ்தான பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆரம்ப ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம் காலை தேவஸ்தானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சரவர்களை தேவஸ்தான பரிபாலன சபைத் தலைவர் சிவசண்முக ஐயர் மற்றும் ஆதீனகர்த்தா சபை உறுப்பினர்கள் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்றனர். இம்மாதம் பத்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள பெருவிழாவானது எதிர்வரும் இருபத்தைந்தாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகத்தினருடனும் வல்வெட்டித்துறை நகரசபை நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடிய அமைச்சரவர்கள் பெருவிழா ஆரம்பிப்பதற்குரிய ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.

குறிப்பாக சுற்றாடலில் தூய்மையினைப்பேணுதல் தேவஸ்தான கேணிகளை புனரமைத்தல் அடியார்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளல் தொடர்பில் உரிய பணிப்புரைகளை வழங்கிய அமைச்சரவர்கள் பக்தர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடிய கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டதுடன் இதுதொடர்பாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் தி.வரதீஸ்வரன் அவர்களுக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொண்டமனாறு செல்வசந்நிதி தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் இம்மாதம் 10ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து 15 நாட்கள் வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் உற்சவத்தில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆலய நிர்வாகத்தினரும் அப்பகுதி சமய பெரியார்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பக்தர்களின் வசதி கருதி கதிரிப்பாய் ஊடான அச்சுவேலி - தொண்டமானாறு வீதியை திறப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினருடன் தொடர்புகொண்ட அமைச்சரவர்கள் பக்தர்களின் வசதி கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’