தமது நாட்டினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமானால் அது தொழிலாளர்களின் உரிமைகளை கவனத்திற் கொண்டே வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் இன்றி தன்னிச்சையாக தீர்மானமொன்றை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பாக ஆராயும் பொருட்டு அமெரிக்காவிலிருந்து உயர்மட்ட அதிகாரிகள் இருவர் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
அமெரிக்காவின் வர்த்தக அதிகாரி மைக்கல் டிலனி தலைமையிலான இக்குழு, இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாகவும், தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அமெரிக்க உயர்மட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பாக ஆராயுமாறு அமெரிக்க தொழிலாளர் சம்மேளனத்தினால் அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’