வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள கடற்றொழிலாளர்களின் கோரிக்கையின் பேரில் கெருடாவில் தெற்கு காட்டுப்புலம் கரையோரப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வடமராட்சியில் சுமார் 38 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்துவரும் கடற்றொழிலாளர்களின் சார்பில் சமாசச் செயலாளர் யோகராசா அவர்கள் தமது கோரிக்கைகளை அங்கு முன்வைத்தார். முக்கியமாக இன்னமும் வத்தைப்படகில் கடற்றொழில் மேற்கொள்ளும் தமக்கு உரிய கட்றறொழில் படகுகளை பெற்றுக்கொள்ள உதவுமாறு அங்கு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அமைச்சரவர்கள் அங்கு சமூகமளித்திருந்த யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தர்மலிங்கம் அவர்களுடன் கலந்துரையாடியபோது சிறிய படகுகளைவிட கூட்டாக தொழில் மேற்கொள்ளக்கூடிய பெரிய படகுகளை கொள்வனவு செய்வதே வாழ்வாதாரத்திற்கு உகந்தது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக தமது முழு விருப்பத்தையும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்த நிலையில் இது தொடர்பான அறிக்கையொன்றினையும் தமக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சரவர்கள் உரிய இலகுகடன் ஊடாக குறிப்பிட்ட பெரிய படகுகளை கொள்வனவு செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். தமது வாழ்வாதாரம் தொடர்பாக தமது கோரிக்கையினை ஏற்று நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பிரதேச கடற்றொழிலாளர்களும் அவர்தம் குடும்பங்களும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’