புகையிரத சேவையின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் குளிரூட்டப்பட்ட அறைகளில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்ட நேர அட்டவணையே எனத்தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம புகையிரத நிலையங்களில் அதிகாரிகள் பணியாற்றும் அறைகளிலுள்ள குளிரூட்டல் சாதனங்களைஅகற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்
“கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும் உதயதேவி கடுகதி புகையிரத சேவை மூலம் மாதாந்தம் 64லட்சத்து 70ஆயிரத்து 600ரூபாய் நட்டமேற்படுகிறது. இதற்கு காரணம் உதயதேவி கடுகதி புகையிரதத்தில் பயணிகள் இல்லாமலேயே புகையிரதம் பயணிப்பதாகும் எனத் தெரிவித்தார்.
ஆகவே இதற்குப் பின் உதயதேவி கடுகதி புகையிரதத்தை அனைத்து பிரதான புகையிரத நிலையங்களிலும் நிறுத்தும்படி புகையிரத அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு – மட்டக்களப்பு உதயதேவி கடுகதி புகையிரத சேவையின் சராசரி செலவு 2லட்சத்து 80 ஆயிரம் ரூபா மற்றும் வருமானம் 64 ஆயிரத்து 320 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’