யாழ். மாநகர அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் நேரடியாக சென்று பார்வையிட்டும் ஆராய்ந்துமுள்ளார்.
இன்று அதிகாலை முதல் யாழ். மாநகரப் பிரதேசங்களிலுள்ள புல்லுக்குளம் குருநகர் குலவிளக்கு மாதா கோவிலடி குருநகர் தண்ணீர்த் தாங்கியடி நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான பிரதேசம் பிராமணக்கட்டுக் குளப்பகுதி உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் நேரடியாகச் சென்ற அமைச்சரவர்கள் பிரதேச மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை நடாத்தினார். குறிப்பாக நாடுபூராகவும் நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடபகுதியிலும் அதனை முன்கொண்டு செல்வதே இதன் பிரதானமான நோக்கமாகும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இவ் ஆய்வுப்பணிகளில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடபிராந்திய அபிவிருத்திப் பணிப்பாளர் என்.ராஜநாயகம் முன்னாள் யாழ். மாநகர சபை பிரதம பொறியியலாளரும் யூரோவில் நிறுவனப் பணிப்பாளருமான ராமதாஸ் ஆகியோருடன் அமைச்சு மற்றும் மாநகர அதிகாரிகளும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’