வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

விமானத்தில் கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 12 கோடி ரூபாவிற்கும் அதிகமான வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதன்படி, விமான நிலையத்தில் கடமையாற்றும் 15 பேரிடம் சுங்க அதிகாரிகள் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய விமான நிலையத்திலுள்ள சுத்திகரிப்பு பிரிவு, பொறியியலாளர் பிரிவு, உணவு பறிமாறும் பிரிவு மற்றும் விமானம் நாட்டிற்குள் வந்து மீண்டும் நாடு திரும்பும் வரை பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் என அனைத்து பிரிவினரிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை வெளியிலிருந்து விமானத்திற்குள் கொண்டு சென்றிருக்க முடியுமா என்ற சந்தேகத்திலேயே இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்கத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’