தனது உடலின் பல பாகங்களில் மயிர்கள் அடர்த்தியாக காணப்படுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்பதற்காக தான் விஞ்ஞானியாக விரும்புவதாக 5 வயது சிறுமி கூறியிருக்கிறாள்.
சீனாவைச் சேர்ந்த, சியன் சியன் எனும் இந்தச் சிறுமி, தனது பாட்டியினுடைய வீட்டில் வசித்து வருகிறாள். அவள் தனது உடலில் உள்ள தேவையற்ற உரோமங்களை தினமும் சவரம் செய்து வருகிறாள்.
சியனுக்கு அண்மையில் காய்ச்சலும் வலிப்பும் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அப்போது அவளுடைய நிலைமையைப் பார்த்து மருத்துவர்கள் திகைப்படைந்தனர்.
இதைப் போன்று அவளது குடும்பத்தின் மூன்று சந்ததியில் யாருக்கும் இருந்ததில்லை. எனவே இது மரபு சார்ந்த நோய் அல்ல என மருத்துவர் சோ ஹொங்போ தெரிவித்திருக்கிறார்.
"அவளது அடர்த்தியான உரோமத்தை உற்றுப்பார்த்து நகர மக்கள் இவளுக்கு ஏன் நீண்ட உரோமம் உள்ளதென்று கேள்விக் கேட்கின்றனர்;. அதனால் அவளை நகருக்கு அழைத்துச் செல்வதில்லை" என்று அவளது தாத்தாவும் பாட்டியும் தெரிவித்துள்ளனர்
"பாலர் வகுப்பில்கூட ஒவ்வொரு நாள் காலையிலும் மக்கள் அவளை பார்த்துவிட்டு ஏன் அவள் அதிக உரோமத்துடன் காணப்படுகிறாள் என்று என்னிடம் கேள்வி எழுப்புவது எனக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துகிறது" என்று அவளது பாட்டி தெரிவித்தார்.
அந்த சிறுமியின் பெற்றோர் விவாகரத்துப் பெற்றவர்கள். அவளை கிராமத்தில் பாலர் வகுப்பிலுள்ள ஏனைய பிள்ளைகள் தன்னை கேலி செய்வதகாவும் அச்சிறுமி கூறுகிறாள். கூறி அழுதுள்ளாள்.
அவளை சிலர் மிகவும் குரூரமாக, குரங்குப் பெண்' என்ற பட்டப்பெயர் சொல்லி அழைக்கின்றனராம்.
ஆனால், அந்தச் சிறுமி மகிழ்ச்சியுடன் வீட்டில் இருக்கிறாள். 'நான் எனது தாத்தாவையும் பாட்டியையும் அதிகமாக விரும்புகின்றேன். முக்கியமாக, எனது பாட்டியை நேரிக்கிறேன். அவர்கள் எப்பொழுதும் என்னுடன் அன்பாக பழகுகின்றார்கள். நான் விஞ்ஞானியாக வேண்டும். விஞ்ஞானியாகிய பின் எனது உடலில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும்? என்று அந்தச் சிறுமி தெரிவித்துள்ளாள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’