கொழும்பு நகர பகுதியில் அரசாங்கக் காணியில் குடியிருக்கும் 60,000 ஆயிரம் குடும்பங்களை வேறு இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுமதியளித்துள்ளது.
இவர்களை இடமாற்றுவதால் பெறப்படும் விலைமதிப்புள்ள காணிகள் வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சரவையின் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா கூறினார். இந்த அபிவிருத்திக்காக அபிவிருத்தி அதிகார சபையின் கடன் பத்திரங்கள் விற்கப்பட்டு முதற்கட்டமாக 5 பில்லியன் ரூபா மூலதனம் உருவாக்கப்படும்.
பின்னர் மீட்கப்பட்ட 78 ஏக்கர் நிலமும் பேர்ச் ஒன்று 2 மில்லியன் ரூபா வீதம் குத்தகைக்கு விடப்பட்டு மேலும் நிதி திரட்டப்படும். இந்த நிதியில் ஒரு பகுதி வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு வசதி வழங்கப் பயன்படுத்தப்படும். வீட்டுத் திட்டங்கள் நகருக்கு வெளியில் அல்லது காணிவிலை குறைந்த இடங்களிலிலேயே செயற்படுத்தப்படும்.
கொழும்புக்குள் குடியேற்றப்படுவர்கள் தமது வீடுகளுக்கு பணம் கட்ட வேண்டும். நகரத்துக்கு வெளியில் குடியேற்றப்படுவோரிடமிருந்து பணம் வசூலிப்பதை தவிர்ப்பதே எமது விருப்பமாக உள்ளது. இவ்வாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குருகுலசூரிய கூறினார்.
இதே சமயம் சீர்திருத்த புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ.குணசேகர, வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றியதும் சிறைச்சாலை அமைந்துள்ள பெறுமதிமிக்க காணி விற்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’