இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கும் மக்களுக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளை நாம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் சங்கானை சமுர்த்தி வங்கி வளாகத்தில் சேவாலங்கா நிறுவனத்தால் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 830 மீளக்குடியமர்ந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த வீட்டுத் திட்டங்கள் யாழ் மாவட்டத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வீட்டின் பெறுமதி ஆறு இலட்சம் ரூபாவாக இருக்கி;றது இது பெரும்பாலாக வன்னி மக்களுக்கு ஒரு வரப்பிரசாரமாகும். இதற்காக இவ்விடத்தில் நான் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
அதே போன்று உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்ற இங்கு மட்டுமல்லாது வன்னியிலும் இவ் உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன இதனையும் நாம் படிப்படியாக மக்கள் பாவனைக்கு விடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியினால் சில உயர்பாதுகாப்பு வலயங்கள் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது குறிப்பாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியேறியுள்ளனர். அதாவது நாம் நடைமுறைச் சாத்தியமான விடயங்களை மட்டுமே தான் எங்களால் மேற்கொள்ளப்படுமெனவும் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பி.யின் வலிகாம பிரதேச இணைப்பாளர் ஜீவன் பிரதேச சபை உறுப்பினர்கள் உயரதிகாரிகள் உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’