வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 ஜூலை, 2010

கிளிநொச்சியில் மாணவி மீது வல்லுறவு முயற்சி! மக்களால் கைதுசெய்யப்பட்ட நபர் விளக்கமறியலில்

கிளிநொச்சி நகரின் புறநகர்ப் பகுதியில் தனியாகச் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவரை வழிமறித்து பற்றைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் புரிய முயன்ற விற்பனை பிரதிநிதி ஒருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.


இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாது:

கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நகரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து வீட்டிற்குத் தனிமையில் சென்று கொண்டிருந்த போது தனிமையான ஒரு பகுதியில் அந்த வேளை மோட்டார் சைக்கிளில் சென்ற விற்பனை பிரதிநிதி ஒருவர் மாணவியை வழிமறித்து பற்றைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் புரிய முயன்றார்.
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் போராடிய மாணவி எழுப்பிய அவலக் குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் வீதியில் சென்றவர்களும் ஓடிச் சென்று மாணவியைக் காப்பாற்றியுள்ளனர். அத்துடன் அவர் மீது பலாத்காரம் புரிய முயன்ற நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த நபர் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளர்ர.பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’