வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 ஜூலை, 2010

பனைசார் அபிவிருத்தி தொடர்பாக சர்வதேச உள்ளுர் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்

பனை அபிவிருத்திச் சபையூடாக பனைசார் தொழிற்துறையை மேலும் விருத்தி செய்வது தொடர்பாக சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இன்று (26) நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பத்து சர்வதேச மற்றும் உள்ள+ர் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பனைசார் தொழிற்துறையை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் பனை அபிவிருத்திச் சபையூடாக செயற்திட்டங்களை முன்னெடுத்து வெளிநாட்டு வருவாயை ஈட்டக்கூடிய செயற்திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
சர்வதேச மற்றும் உள்ள+ர் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தாம் வழங்கவுள்ள பங்களிப்புக்கள் குறித்தும் தமது கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.
இன்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆலோசகர் திருமதி ஜெகராஜசிங்கம் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’