இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம் எஸ் தோனி விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக 200 கோடி ரூபாய் வருமானம் தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
எந்த கிரிக்கெட் வீரருக்கும் இதுவரை கிடைக்காத அளவுக்கு பெரிய வருமானம் இது.
சச்சின் டெண்டூல்கர் உள்ளிட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் யாருக்கும் இந்த அளவுக்கு பெருந்தொகையான பணம் கிடைத்ததில்லை என்று கூறப்படுகிறது.
தோனி, ரோகிதி ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டு மேலாண்மை நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ள இரண்டு ஆண்டுகால ஒப்பந்தத்தின் படி அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.
இந்த ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானதாக ரோஹித் நிறுவனத்தின் பொது மேலாளர் சஞ்ஜை பாண்டே தெரிவித்துள்ளார். விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக 2006 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டூல்கர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் அவருக்கு 40 மில்லியன் டாலர்கள் கிடைத்தது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐசிசியின் முதலாவது 20 இருபது போட்டிகளில் தோனி தலைமையிலான அணி வெற்றி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் 22 முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் தோனி நடிக்கிறார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் தோனிதான் உலகிலேயே அதிக அளவு சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்று கூறப்பட்டிருந்தது. தோனியின் ஆண்டு வருமானம் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், தெண்டூல்கரின் ஆண்டு வருமானம் 8 மில்லியன் டாலர்களாகவும் இருப்பதாக அது கூறியுள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’