வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 ஜூலை, 2010

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதன் மூலம் உச்ச பயன்பாட்டை பெறலாம் - ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர்

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதன் மூலம் உச்ச பயன்பாட்டை பெறலாம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் சேவாலங்கா நிறுவனத்தால் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 601 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மல்லாகம் சேவாலங்கா அலுவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சார்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் அவர்களினால் உதவிப் பொருட்களை வழங்கி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
மக்கள் தமக்கு கிடைக்கும் உதவிகளில் இருந்து உச்சப் பயன்பாட்டை பெற்றுக் கொள்ளக் கூடியதாக கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மீள் குடியேற்றத்தில் அரசுடன் இணைந்து சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் உள்ளூர் தொண்டர் நிறுவனங்கள் செயற்பட வேண்டியது அவசியமானது. மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்து இம்மக்களின் மேம்பாட்டிற்கு அயராது உழைத்து வருகின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தெல்லிப்பளை பிரதேச செயலர் திரு முரளிதரன் சேவாலங்கா நிறுவன இணைப்பதிகாரி திரு கண்ணன் ஈ.பி.டி.பி.யின் வலிகாம இணைப்பாளர் ஜீவன் உட்பட பெருமளவிலான பயனாளிகளும் கலந்து கொண்டனர்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’