வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் வடபகுதி பட்டதாரிகளுக்கு பயிற்சிப்பட்டறை

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் பயிற்சிப்பட்டறையொன்று வடபகுதி பட்டதாரிகளுக்காக இன்றையதினம் ஆரம்பித்து நடாத்தப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயிற்சிப்பட்டறையினை மங்கல விளக்கேற்றி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். பட்டதாரிகளுக்கு குறிப்பாக தொழில் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு அவர்களது திறனாய்வு மற்றும் தொழில் முயற்சிகள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து உரிய அறிவினையும் தகவல்களையும் வழங்கும் முகமாக நடாத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறையில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பங்குகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உயரதிகாரிகள் ஆகியோர் பங்குகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது





.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’