வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

சிறப்பாக நடைபெற்று வரும் கதிர்காம திருவிழா

கதிர்காம ஆடித் திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த விழாவில் இம்முறை வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்து அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதைக் காணக் கூடிய யுத்த சூழ்நிலை மறைந்துள்ள நிலையில் அச்சமின்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டு, திருமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் இம்முறை கதிர்காம ஆடித் திருவிழாவுக்கு செல்வதற்கு இன்னமும் பலர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பஸ்கள், கார்கள், வான்கள் மாத்திரமின்றி பெருமளவு பக்தர்கள் கால்நடையாகவும் இங்கு வந்து குவிந்த வண்ணமிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி தீ மிதிப்பும், 25ஆம் திகதி முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் வீதியுலா வருதலும், 26ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா நிறைவடைய உள்ளது. கதிர்காம திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் பெரஹரா ஊர்வலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’