கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
இதன்போது, மன்றில் ஆஜராகியிருந்த கொம்பனித்தெரு பொலிஸார், சிரச ஊடக வலையமைப்பு கையளித்த பெயர் பட்டியலிலுள்ள 14 சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவத்தைப் படம்பிடித்த புகைப்படப் பிடிப்பாளர்கள் மற்றும் வீடியோ படப்பிடிப்பாளர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் குறித்த வழக்குக்கான சாட்சியங்களாகப் பயன்படுத்தலாம் எனவும் நீதிவான் கூறினார். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய 12ஆவது மற்றும் 14ஆவது சந்தேக நபர்களை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
கொழும்பு, பிரேபுறுக் பகுதியில் அமைந்துள்ள எம்.பீ.சி / எம்.டி.வி தலைமை அலுவலகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில் 16 பேர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’