வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 6 ஜூலை, 2010

ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

கடந்த 30 வருடங்களுக்கும் மேல் எமது நாட்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த பயங்கரவாதத்தை இந்த நாட்டிலிருந்து பூண்டோடு அழித்து இன்று நாட்டில் அமைதிச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ள மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் எமது மக்கள் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். (உரை முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது)

தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதைய நிலைமைக்கேற்ப தளர்த்தப்பட்டு எமது மக்களின் சுதந்திரமான வாழ்கைக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது காலத்தின் தேவையாக இருக்கிறது.
இந்த நிலையில் யாழ். குடாநாட்டில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள வலிகாமம் வடக்கு வடமராட்சி கிழக்கு மற்றும் வன்னிப்பகுதி மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இந்திய விஜயத்தின் போது இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவியைப் பெற்றுக் கொண்டுள்ளமையானது உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயமாகும. இதற்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே இந்த நிதி உதவியைக்கொண்டு உரிய வீடமைப்புத் திட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படவேண்டும்.
இதே நிலையில் யாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்புகளற்ற நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணப்படுகின்றனர். குறிப்பாக யாழ்.குடாநாட்டில் 2200 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் மேலும் தொழிற்பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்கள் என ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டிய அவசியமான ஒரு நிலை தோன்றியுள்ளது.
அதே நேரம் யாழ் குடாநாட்டில் தொழி;ல் வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். இந்தவகையில் அச்சுவேலி தொழிற்பேட்டையை அமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் விரைவுபடுத்தப்பட்டு அத் தொழிற்பேட்டை அமையுமானால் அதன் மூலம் பலருக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்கமுடியும்.
அதே நேரம் யாழ்ப்பாணத்திலே குறிகட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையிலான படகுச் சேவை தொடர்பில் பல காலமாக தொடர்ந்தும் பிரச்சினைகள் நிலவி வருகின்றன. இப்பகுதிக்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குமுதினிப்படகு மிகவும் பழைமையானது என்பதால் அது தொடர்ந்தும் பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகிறது எனவே புதிய படகுகளை இப்பகுதிக்கான சேவையில் ஈடுபடுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இதே நேரம் யாழ். குடாநாட்டில் தீவுப்பகுதி பெண்கள் தொடர்பாக குறிப்பாக நெடுந்தீவு பெண்கள் தொடர்பாக இந்த உயரிய சபையில் ஒருவர் மிகவும் கேவலமாக கதைத்துள்ளார். இது மொத்த நெடுந்தீவு பெண்கள் சமூகத்தினையும் அவமானத்திற்;குள்ளாக்கும் செயற்பாடகும்.
எனவே தங்களது குறுகிய வர்த்தக அரசியல் சுயலாபம் கருதி எமது தீவகப் பெண்களை அவமானப்படுத்தும் நோக்கில் இவ்வாறன தவறானதும் கண்டனத்திற்குரியதுமான பேச்சுக்களை இவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
யாழ். குடாநாட்டில் கடந்த யுத்தகால சூழ்நிலையில் மக்கள் சொல்லொணாத் துயரங்களில் மூழ்கியிருந்தபோது மண்ணெண்ணெய் முதற்கொண்டு அனைத்துப் பொருட்களிலும் கொள்ளை இலாபமடித்து எமது அப்பாவி மக்களைச்சுரண்டி சாப்பிட்டு வளர்ந்த குடும்பம் இப்போது நெடுந்தீவு பெண்களை மானபங்கப்படுத்துவதில் ஈடுபட்டு வருவது எமது பெண்கள் சமூகத்தின் கண்டனத்திற்குரிய விடயமாகும் என்பதையும் இந்த சபையில் நான் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.
மிகவும் பிரசித்தி பெற்ற திரு முறிகண்டி ஆலயம் தொடர்பாக மத அலுவல்கள் அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவர இருக்கிறேன்.
இந்த ஆலயம் 1886ம் ஆண்டு கந்தர் சின்னப்பர் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது இக் காலப்பகுதி ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ஆகும்.
தொடர்ச்சியாக இவ் ஆலயம் அவரது பரம்பரையினரினால் பராமரிக்கப்பட்டு வந்தது 1990ம் ஆண்டு வரை இவ்வாலயம் பரம்பரையினரின் பொறுப்பிலேயே இருந்து வந்தது. இந்த சந்ததியினரின் குணரட்ணம் என்பவர் பொறுப்பில் இருந்த காலத்தில் 1990 புலிகள் இயக்கத்தினரால் பல வந்தமாக பறிக்கப்பட்டது குணரட்ணமும் அவரது குடும்பத்தினரும் ஆலையப்பகுதியில் இருந்து துரத்தப்பட்டனர். இவ் ஆலயத்தை சுற்றியுள்ள இவர்களது வீடு உடமைகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து துரத்தியடித்தனர் இவர்கள் இந்தியாவிற்கு தப்பி ஓடினார்கள் இவர்களது குடும்பத்தில் 3 பேர் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனா.; பறிமுதல் செய்யப்பட்ட இவர்களது ஆலயமும் உடமைகளும் புலிகளின் வசூல் அமைப்பு நிர்வகித்தது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து இவ் ஆலயத்தை மீள இயக்கவும் ஏ9 பாதையினால் பயனிக்கும் மக்களின் நலன்களுக்காகவும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்த முயற்சியினால் ஆலயம் மீளவும் மக்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. ஆலய �சகரையும் கௌரவ அமைச்சர் நியமித்திருந்தார் கோவிலின் உரிமையாளர்கள் மீள் குடியேற்ற நடவடிக்கை ஊடாகவந்து ஆலயத்தினை பொறுப்பேற்க முன்வந்த போது இவ் ஆலயம் உரியவர்களிடம் ஒப்படைக்க மறுக்கப்பட்டது.
அரசாங்க அதிபர் பிரதேச செயலர் இந்து கலாசாரத் திணைக்களம் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என பலர் இக் கோயிலை தற்சமயம் நிர்வகிக்கின்றனர் அல்லது ஏதோ ஒருவகையில் சம்மந்தப்பட்ட உரியவர்களிடம் கிடைக்க தடைகளை போடுகின்றனர் ஆகவே இவ்விடயத்தில் கௌரவ பிரதமர் அவர்கள் தலையிட்டு கோவிலின் உண்மையான உடமையாளர்களிடம் இவ் பிரசித்தி பெற்ற ஆலயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது உடமையாளர்கள் ஆலயத்தின் நலன் விரும்பிகள் அடங்கிய நிர்வாகத்தை ஏற்படுத்தி ஆலயத்தை நிர்வகிக்க முன்வரவேண்டும் ஆலயத்தை சுற்றியுள்ள மேற்படி உரிமையாளர்களின் வீடுகளில் அவர்கள் மிள்குடியேற்றவும் அனுமதிக்க வேண்டும.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’