முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலதிபருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 21ஆவது சிரார்த்ததின வைபவம் எதிர்வரும் 13ஆம் திகதி நினைவு கூரப்படவுள்ளது.
வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளையினர் நினைவுதின ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவிலுள்ள ஆலயங்களில் அன்று காலை விசேட மோட்ச அர்ச்சினைகளும் மாலை 4 மணிக்கு நகரசபை மண்டபத்தில் நினைவுதின சொற்பொழிவும் நடைபெறுமென தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’