வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஜூலை, 2010

கருணாவின் போதை நடனம் அம்பலமானாதால் அதிகாரியின் பணி பறிப்பு

மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, அவரின் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் திருமண வீடு ஒன்றில் குடித்து விட்டு கும்மாளம் போட்டு வெறிக் கூத்து ஆடி இருக்கின்றார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காதுகள் வரைக்கும் தகவல் சென்றிருக்கின்றது.



இந்நிலையில் இருவரையும் சில நாட்களுக்கு முன் அலரி மாளிகைக்கு வரவழைத்து இருவரையும் ஜனாதிபதி கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார்.
பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? என்றும் கடிந்து கொண்டார். இருவராலும் மஹிந்த சிந்தனைக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது என்றும் ஏசியுள்ளார்.
அமைச்சர் தாளம் போட... பிரதியமைச்சர் ஆட.. சனம் அதைப் பார்த்த சம்பவம் ஒரு திருமண வீட்டில்தான் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சில் ஊடக இணைப்பு அதிகாரியாக கடமையாக இருந்து வந்தவர் ஸ்ரான்லி பத்திராஜ.
இவரின் மூத்த மகனுடைய திருமண வைபவத்திலேயே இவையெல்லாம் நடந்தேறின. இந்நிலையில் ஜனாதிபதி திட்டித் தீர்த்தமையின் எதிரொலியாக அமைச்சரும், பிரதியமைச்சரும் பத்திராஜவை பதவியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தம் செய்துள்ளார்கள்.
இருவரினதும் வெறியாட்டத்தை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி விட்டார் என்று குற்றஞ்சாட்டி இப்பதவி இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’