பிரதியமைச்சர் மேர்வின் சில்வா, தனக்கான கல்லறைக்குரிய கல்லறைக்கான இடத்தை இன்று தெரிவுசெய்துள்ளார்.
பொரளை கனத்தை மயானத்தில் இன்று நடைபெற்ற பாடகர் எச்.ஆர். ஜோதிபாலவின் 23 ஆவது வருட நினைவுதின நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றபோதே அமைச்சர் மேர்வின் அங்கு தனக்கான கல்லறைக்குரிய இடத்தை ஒதுக்கியுள்ளார்.
இவ்வைபவத்தில் பங்குபற்றிய பிரதியமைச்சர் மேர்வின் எதிர்காலம் என்பது எதிர்வுகூறப்பட முடியாதென்பதால் தனக்கான கல்லறைக்குரிய இடத்தை தெரிவுசெய்யப்போவதாகக் கூறியதும் அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
அதன்பின், பாடகர் எச்.ஆர். ஜோதிபாலவின் கல்லறைக்கு அருகிலுள்ள வெற்று இடமொன்றை தெரிவு செய்த மேர்வின் சில்வா, அதை தனது கல்லறைக்காக ஒதுக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஊடனடியாக அவர் கொழும்பு மாநகரசபை ஆணையாளர் ஒமர் காமிலுக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்து, அந்த இடத்தை தனது கல்லறைக்காக ஒதுக்கும்படி கூறினார். அதன்பின் அங்கிருந்த பொரளை கனத்தை மயானத்தின் பொறுப்பாளரிடமும் இது குறித்து மேர்வின் சில்வா கூறினார்.
தான் இறந்த பின்னர் இந்த இடத்திலேயே புதைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கும்படி மயானப்பொறுப்பாளரிடம் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
"எனது சவப்பெட்டியைக் கூட இன்று நான் வாங்க முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக எனது வீட்டில் அதை வைத்திருப்பதற்கு இடமில்லை" என அங்கு கூடிநின்றவர்களிடம் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
மயானத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் அங்கு மேளமொன்றுடன் நின்ற ஒருவரை அழைத்து, எச்.ஆர். ஜோதிபாலவின் பாடலொன்றை இசைத்துக்காட்டும் படியும் மேர்வின் சில்வா கூறியமை குறிப்பிடத்தக்கது.













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’