வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஜூலை, 2010

கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஷாருக்கான்...

கடந்தமாதம் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிய கால்பந்தாட்ட உலககிண்ணப் போட்டி இம்மாதம் 11ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் நிறைவுபெறுகிறது.
எதிர்பார்க்கப்பட்ட பல முன்னணி கால்பந்தாட்ட அணிகள் வெளியேறிய நிலையில் பல திருப்பங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். குறுகிய நேரத்தில் போட்டிகளின் முடிவுகளை அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதால் உலகளாவிய ரீதியில் கால்பந்தாட்டத்துக்கு ரசிகர்கள் ஏராளாம்.
ஏற்கனவே கிரிக்கெட்டின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியிருந்த பொலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இம்முறை கால்பந்தாட்ட மோகம் பிடித்திருக்கிறது. தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் ஷாருக்கான், தென்னாபிரிக்காவில் நடைபெறும் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியினைப் பார்ப்பதற்கு புறப்படவிருக்கிறார். தனது மகன் ஆர்யனுக்கு கால்பந்தாட்டம் என்றால் பிரியமாம். அதனால் ஷாருக்கிற்கும் அந்தப் பிரியம் பிடித்திருக்கிறது போலும்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’