வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 ஜூலை, 2010

வடக்கில் தொண்டர் ஆசிரியர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஜனாதிபதி உறுதி

வடக்கில் தொண்டராசிரியர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; வெகு விரைவில் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விரைவில் விடுவிக்கப்படுவரென்ற உறுதி மொழியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலக மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கடந்த காலங்களில் வடக்கு மக்கள் அனுபவித்த துயரங்களுக்கு கடந்த 2009 மே 18 ஆம் திகதியுடன் முடிவுகிட்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’