இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோரிடேக் பல்தேசிய கம்பனியின் தலைவர் ஹிடோஷி தனிமுரா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இன்றையதினம் காலை (15) ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் அலரிமாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஹிடோஷி தனிமுரா ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட நோரிடேக் பல்தேசிய கம்பனியானது ஏற்கனவே இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் தொடர்பாக தெரியப்படுத்தியதுடன் மேலும் பல முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் யுத்தம் முடிவுற்ற நிலையில் தற்சமயம் சர்வதேச முதலீடுகளுக்கு பொருத்தமான சூழ்நிலை தோன்றியுள்ளதாகவும் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வரும் நிலைமையினையும் எடுத்துக் கூறினார்.
ஜனாதிபதியுடனான நோரிடேக் பல்தேசிய கம்பனியின் தலைவர் ஹிடோஷி தனிமுராவின் சந்திப்பின்போது அக்கம்பனியின் இலங்கை நிறுவனமான நோரிடெக் போர்சிலைன் கம்பனியின் உப தலைவர் மற்றும் அக்கம்பனியின் நிர்வாக ஆலோசகர் சியன் கசேகவ ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’