வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 ஜூலை, 2010

வைகோ-நெடுமாறனுக்கு உள்ளிட்ட 180 பேருக்கு ஜாமீன்!

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காகப் போராடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, பழ. நெடுமாறன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் உள்பட 180 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை 18வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிமன்றம் வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 180 பேரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்:

முன்னதாக வைகோ கைதை கண்டித்து மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், தமிழ்நாடு வக்கீல்கள் தமிழ் சங்கத் தலைவர் சின்ராஜா, மதிமுக சட்டப் பிரிவு நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’