வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஜூலை, 2010

கையொப்பமின்றி சர்வகட்சிக் குழுவின் திட்டத்தை வெளியிடுவது தவறாகும்

சர்வகட்சிக் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட தீர்வுத்திட்ட அறிக்கையை, குறித்த கட்சிப்பிரதி நிதிகளின் கையொப்பம் இன்றி வெளியிடுவது தவறான விடயமாகும் என்று சர்வகட் சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.


தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் அபிப்பிராயத்தையும் கேட்டுக்கொண்டு திருத்தங்களுடன் கட்சிகளின் பிரதிநிதிகள் கையொப்பம் இட்டபின்னர் அதனை வெளியிடுவதே பொருத்தமான நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை எனக்கூறி ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி. ஆர். யோகராஜனினால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது :
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிக்கும் நோக்கில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் அதிகமõன கட்சிகள் அங்கம் வகித்தன. எனினும் ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவைவிட்டு விலகின. இறுதியில் 13 கட்சிகள் மட்டுமே அங்கம் வகித்தன.
இந்நிலையில் குறித்த 13 அரசியல் கட்சிகளும் 100 க்கும் மேற்பட்ட தடவைகள் கூடி பல்வேறு விடயங்களில் இணக்கப்பாட்டுக்கு வந்த நிலையில் ஆரம்பகட்ட அறிக்கை ஒன்றை தயாரித்தோம். குறித்த ஆரம்பகட்ட தீர்வு அறிக்கையானது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்தையும் கேட்டறிந்து தேவைப்படின் திருத்தங்களை மேற்கொண்டு 13 கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்ட பின்னர் இறுதி திட்டமாக அதனை வெளியிட எண்ணியுள்ளோம்.
ஆனால் இதுவரை நாங்கள் இறுதி தீர்வை தயாரிக்கவில்லை. மேலும் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்பகட்ட திட்டத்தில் சர்வகட்சி குழுவில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திடவுமில்லை. எனவே இவ்வாறான பின்னணியில் எக்காரணம்கொண்டும் ஆரம்பகட்ட திட்டத்தை பாராளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ எம்மால் வெளியிட முடியாது. அது சரியான விடயமல்ல.
அதனை வெளிப்படுத்துமாறு அங்கம் வகிக்கும் சில கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை செய்ய என்னால் முடியாது. அவ்வாறு யாராவது வெளியிட்டிருப்பின் அது தவறான விடயம் என்பதனை கூறுகின்றேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’