வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்.

யாழ். குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்திற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் விஜயம் மேற்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம் முற்பகல் அங்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்களை வடகடல் நிறுவனத் தலைவர் பரந்தாமன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். வடபகுதி கடற்றொழிலுக்குரிய உற்பத்திப் பொருட்களை உள்ளுரிலேயே பெற்றுக்கொடுக்கும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னர் புனர்வாழ்வு அமைச்சராக பதவிவகித்தபோது அவரின் பெருமுயற்சியின் காரணமாக 2002ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதே வடகடல் நிறுவனமாகும்.

வடகடல் நிறுவனத்தின் தற்போதைய செயற்பாட்டு நிலவரங்களை அதன் பிரதிப் பொதுமுகாமையாளர் கேதீஸ்வரன் அவர்கள் நீண்ட விளக்கத்தின் ஊடாக எடுத்துரைத்த அதேவேளை அதன் எதிர்கால மற்றும் மேம்பாட்டு செயற்றிட்டங்களை மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கேதீஸ்வரன் எடுத்துக் கூறினார். இதனைத் தொடர்ந்து நிறுவனத்தினை இலாபமீட்டும் வகையில் மாற்றியமைப்பது குறித்தும் அதிகூடிய வினைத்திறனை வெளிக்காட்டும் வகையில் உற்பத்தி ஆற்றலை அதிகரிப்பது குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஆய்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இவை தொடர்பாக அமைச்சின் செயலாளருக்கும் வடகடல் நிறுவன உயரதிகாரிகளுக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கிய அமைச்சரவர்கள் திறைசேரி உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

2006ம் ஆண்டு இடம்பெற்ற ஆயுதமோதல்கள் காரணமாக முற்றாக ஸ்தம்பித்த வடகடல் நிறுவனமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக தனது உற்பத்தியை மீள ஆரம்பித்துள்ளதுடன் 2009ம் ஆண்டு 40 மெற்றிக் தொன் மீன்பிடி வலைகளை உற்பத்தி செய்ததுடன் 2012ம் ஆண்டில் அவ்வுற்பத்தியை 80 மெற்றிக் தொன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கடற்றொழில் படகு உற்பத்தியும் வடகடல் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’